புதுச்சேரியில் கண்களை கவரும் பாரம்பரிய கார்களின் கண்காட்சி

326

புதுச்சேரியில் நடைபெற்ற பாரம்பரிய கார்களின் கண்காட்சி, சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்தது.

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை சுற்றுலாத் துறை மற்றும் மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டார்ஸ் கிளப் இணைந்து நடத்தின. 9வது முறையாக நடந்த கண்காட்சியில், 74 கார்கள் இடம்பெற்றன.

இதில் ஆஸ்டின், மோரிஸ், மோரிஸ் மைனர், ஜாகுவார் ஆகிய கார்கள் அணிவகுத்து நின்றன. திரைப்படங்களில் பார்த்து ரசித்த கார்களை, நேரில் காண்பது தங்களை உற்சாகப்படுத்துவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.

பழமையான கார்களை தொட்டு பார்த்து மகிழ்ந்த மக்கள், அவற்றின் அருகே நின்று புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.