விதிமுறை மீறல் ! யோகி ஆதித்யாநாத், மாயாவதி பிரச்சாரம் செய்ய தடை

227

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பிரச்சார பொதுக்கூட்டங்களில் விதிகளை மீறி பேசி வருவதால் தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய யோகி ஆதித்யாநாத், இந்துக்கள் அனைவரும் பாஜகவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று பேசினார். இது தேர்தல் விதிமுறையை மீறியதாக கூறி தேர்தல் ஆணையம் அவருக்கு பிரச்சாரம் செய்ய நாளை முதல் 3 நாட்களுக்கு தடை விதித்துள்ளது.

அதேபோல், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியும் தேர்தல் விதிமுறைகள் மீறியதாக கூறி நாளை முதல் 2 நாட்களுக்கு பிரச்சாரம் செய்ய தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

யோகி ஆதித்யாநாத் மற்றும் மாயாவதி ஆகிய இருவருக்கும், பொதுக்கூட்டம், டி.வி.களுக்கு பேட்டி அளிக்கவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of