பெங்களூருவில் கடும் வன்முறை – போலீஸ் துப்பாக்கிச்சூடு

378

பெங்களூருவில் நிகழ்ந்த வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.

எம்.எல்.ஏ வீடு மற்றும் காவல் நிலையம் தாக்கப்பட்டு, போலீஸ் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

கர்நாடக மாநிலம் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் அகண்டா சீனிவாச மூர்த்தி. இவரது உறவினரின் சமூக வலைதள பக்கத்தில், ஒரு தரப்பினரை இழிவுப்படுத்தும் வகையில் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, எம்.எல்.ஏ அகண்டா சீனிவாச மூர்த்தியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டவர்கள், வீடுகளுக்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால், டி.ஜே.ஹள்ளி, கே.ஜி.ஹள்ளி மற்றும் புலிகேசி நகர் ஆகிய பகுதிகள் பதற்றம் ஏற்பட்டது. காவல் நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு, போலீசாரின் வாகனங்களை தீ வைத்து எரித்தால் பரபரப்பு நிலவியது.

Advertisement