வைரலாகும் ‘பேட்ட’ படக் காட்சி

582

சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகும் பேட்ட படத்தின் ஓர் காட்சி. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் கார்த்திக் சுப்புராஜ். இவர் பீட்சா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த திரைபடம் 2012 ஆண்டு வெளியானது.

இப்படம் வெளிவருவதற்கு முன் சின்னதிரையில் குறும்படங்கள் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். அதன் பின் முன்னனி இயக்குனர்களில் ஒருவராக மாறினார். அதன் பின் இறைவி, ஜிகர்தண்டா என்ற சில படங்களை இயக்கினார்.

மேலும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து பேட்ட என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்நிலையில் படம் வெளியாகி ஒரு ஆண்டு கழித்து தற்போது அனைவருக்கும் தெரியாத தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் பேட்ட திரைப்படத்தின் ஸ்கிரீன் ஷாட் புகைப்படமும் வைரலாகுகிறது. அந்த ஸ்கிரீன் ஷாட்டில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிகாந்த் வார்டனாக பொறுப்பேற்க்கும் போது ஒரு கடிதத்தை ஒருவரிடம் ஒப்படைப்பார்.அந்த காட்சியில் வருவது கார்த்திக் சுப்புராஜ் மனைவிதான் என்பதை நெட்டிசன்கள் தற்போது கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

கொரோனா அச்சத்தில் அனைவரும் இருக்கும் போது, இது போன்ற தேவையில்லாத காரியங்களை வைரலாக்குவதை விட்டு விட்டு கொரோனா தடுப்பு பணிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், கொரோனாவால் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் குடும்பங்களுடைய முகவரிகளையும் வைரலாக்கினால் பயன்னுள்ளதாக இருக்கும். அவர்களுக்கு தேவையான உதவிகளும் அவர்களிடம் போய் சேரும். தேவையற்றதை விட்டு விட்டு தேவையுள்ளதை வைரலாக்குவோம்.

Advertisement