போலீசார் கவனக்குறைவு! பொம்மைத் துப்பாக்கியால் சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

493

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் 17 வயதான மேரி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது). உடல்நிலை சரியில்லாத நிலையில் அந்த சிறுமி வீட்டில் இருந்த காரை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார்.

இதனை அறிந்து சிறுமியின் பெற்றோர் போலீசிடம் புகார் அளித்தனர். புகார் தெரிவித்த சில மணி நேரங்களுக்கு பிறகு சிறுமி இறந்துவிட்டதாக, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் என்ன நடந்தது என்று விசாரித்த போது, சிறுமி போலீஸ் மீது காரை மோதியதாகவும், பின்னர் தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து போலீசை மிரட்டியதாகவும், இதனால் போலீசார் அந்த சிறுமியை சுட்டுவிட்டனர் என்றும் தெரிய வந்தது.

இந்நிலையில் சிறுமி பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்றும் காவலர்களின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த வீடியோ பதிவில் வாகனம் மோதியதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் சிறுமி காவலர்களை நோக்கி துப்பாக்கியை காட்டுவது காவலர்கள் சுடுவதும் பதிவாகியுள்ளது.

இரண்டு முறை காவலர்களால் சுடப்பட்டு தரையில் வீழ்ந்துவிட்டார். அதன்பின்னர் காவலர்கள் சிறுமியை தரையில் கிடத்தி கைவிலங்கு பூட்டுகின்றனர். இந்த வீடியோ விவகாரம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.