“ரொம்ப தாகமா இருக்கு தண்ணீர் கொடுப்பா” கல்நெஞ்சத்தையும் கரைக்கும் அணிலின் செயல்

293

இணையத்தில் வெளியாகும் சில வீடியோக்கள் கல்நெஞ்சம் கொண்டோரையும் கரைய வைத்து விடும். அந்த வகையில் தாகத்தால் தவித்த அணில் ஒன்று, சாலையில் நடந்து சென்றவரிடம் தண்ணீர் கேட்டு குடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை ”தண்ணீர் கேட்கும் அணில்” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார். அதில் தாகத்தால் தவிக்கும் அணில் ஒன்று, சாலையில் நடந்து செல்பரின் கையில் தண்ணீர் பாட்டில் இருப்பதை பார்த்துள்ளது. இதையடுத்து அந்த நபரை பின்தொடர்ந்த அணில், தனது முன்னங்கால்களை உயர்த்தி தண்ணீர் வேண்டும் என்பது போல் அந்த நபரை நெருங்கியது.

இந்த காட்சி நாம் கைகளை உயர்த்தி ஒருவரிடம் ஏதேனும் கேட்பது போல் அமைந்திருந்தது. இதனை அறிந்த அந்த நபர், பாட்டிலை திறந்து தண்ணீர் கொடுக்க, தாகம் தீரும்வரை குடித்த அணில் அங்கிருந்த சென்றது.  இதயத்தை உருகச்செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.