கோலி & அனுஷ்கா சர்மா தம்பதிக்கு பிறந்த குழந்தை..! ரசிகர்கள் வாழ்த்து..!

2097

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவருக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணமாகிய நிலையில், அவர் கர்ப்பம் தரித்தார்.

ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று ஏற்கனவே மருத்துவர்கள் கூறிவிட்டதால், ஆஸ்திரேலியா-இந்தியா இடையேயான கிரிக்கெட் தொடரில் இருந்து, பாதியிலேயே விலகிய கோலி, மனைவியுடன் இருந்து வந்தார்.

இந்நிலையில், தனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதனை அறிந்த நெட்டிசன்கள், அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement