“கொரோனாவை சீரியஸா எடுங்க..” ஜோடியாக வீடியோ வெளியிட்ட விராட் & அனுஷ்கா தம்பதி..!

1760

இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் மத்தியில், இதுதொடர்பான விழிப்புணர்வு சற்று குறைவாகவே உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்களது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அந்த வீடியோவில், கொரோனா வைரஸ் தொற்றை அலட்சியப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், நமக்கு வழங்கப்பட்டிருக்கும் வழிமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்றும், கொரோனாவை விரட்ட நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், அந்த வீடியோவில் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of