இந்திய அணியின் சீருடை மாற்றம்! கோலி என்ன சொன்னார் தெரியுமா..?

931

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. லீக் ஆட்டங்களில் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

அந்த வகையில் இதுவரை ஆஸ்திரேலியா அணி மட்டும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இதில் இந்தியா எஞ்சியுள்ள 3 போட்டிகளில் 1 போட்டியில் வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இந்திய அணியின் புது ஜெர்சி குறித்து கோலி கூறுகையில், ‘எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

ஒரு போட்டியில் தான் இந்த ஜெர்சி அணிந்து விளையாடுவோம். இனிவரும் போட்டிகளிலும் இதே ஜெர்சி அணிந்து விளையாடுவோமா என்பது எனக்கு தெரியாது’ என தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of