“பேனர் உண்மைதான்.. ஆனா விஷயம் தப்பு..” – வைரலாகும் விராட் கோலி

711

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா – பாகி்ஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி தொடர்பான மீம்ஸ்கள் தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது.

அவ்வாறு டிரெண்ட் ஆகும் புகைப்படங்களில் சர்ச்சை கிளப்பும் பேனர் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கையில் பிடித்திருக்கின்றனர்.

அந்த பேனரில், ‘எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்’ என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது.

இந்த புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இந்த புகைப்படத்தில் இருக்கும் பேனர் உண்மை தான் என்பதும், அதில் இருக்கும் வாசகம் மட்டும் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.

virat-kholi

உண்மையில் வைரலாகும் இந்த புகைப்படத்தின் பேனரில் ‘எங்களுக்கு அசாடி வேண்டும்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். தற்சமயம் வைரலாகும் இந்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும்.