மறுப்பு தெரிவிக்கும் ஷேவாக்.., அதிர்ச்சியில்?

170

பாராளுமன்ற தேர்தலில் மக்களிடையே நன்கு பிரபலமானவர்களை தேர்தலில் களம் இறக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க-வினர் தீவிரம் காட்டிவருகின்றனர். இதிலும், குறிப்பாக தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்களை போட்டியிட வைக்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரரான வீரேந்தர் ஷேவாக்கை பா.ஜ.க. சார்பில் போட்டியிட வைக்க முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தன. இதற்காக பா.ஜ.க. பிரதிநிதிகள் அவரை நேரில் சந்தித்துப் பேச்சிவார்த்தை நடத்தின.“மேற்கு டெல்லி தொகுதியில் நீங்கள் போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெறலாம்” என்று ஷேவாக்கிடம் பா.ஜ.க. தலைவர்கள் வலியுறுத்தினார்கள். மேற்கு டெல்லி தொகுதியில் தற்போது பா.ஜ.க. எம்.பி.யாக பர்வேஷ்வர்மா உள்ளார். ஷேவாக் தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அந்த தொகுதியை விட்டுத்தர தயார் என்று அவர் கூறியிருந்தார்.

ஆனால் பா.ஜ.க.வின் கோரிக்கையை ஏற்க கிரிக்கெட் வீரர் ஷேவாக் நிராகரித்துவிட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ எனக்கு ஆசையும் இல்லை, ஆர்வமும் இல்லை” என்றார்.

ஷேவாக்கின் இந்த பதிலில் பாஜக-வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of