பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை முட்புதரில் மீட்பு

708

விருதுநகர் அருகே பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தையை முட்புதரில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

விருதுநகர்: நேற்று இரவு சூலக்கரை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முட்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தேடிய போது, முட்புதரில் பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குழந்தை இருப்பது தெரியவந்தது.

லேசான காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் உள்ள சிசு பாராமரிப்பு பிரிவில் அனுமதித்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, குழந்தையை முட்புதரில் வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிக் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement