மெழுகுவர்த்தி, செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை

803

விருதுநகர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் நோயாளிகளுக்கு செல்போன் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விருதுநகர் அருகே பட்டம்புதூரில் கல்லூரி பேருந்தும், தனியார் சொகுசுப் பேருந்தும் மோதிய விபத்தில் கல்லூரி மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அவர்கள் அனைவரும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு மின்சாரம் தடைப்பட்டதால், மருத்துவமனை இருளில் மூழ்கியது.

மருத்துவமனையில் ஜெனரேட்டர் இருந்தும் இயக்கப்படாததால், நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் நேயாளிகளுக்கு மெழுகுவர்த்தி, செல்போன் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்த அவலமும் அரங்கேறியது.

Advertisement