வைரஸ் பாதிப்பு..! இன்றைய நிலவரம் என்ன..?

172

தமிழகத்தில் வைரஸ் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி, சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 860 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் 1,179 பேரும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 15 ஆயிரத்து 444 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 127 பேர் பலியான நிலையில், 5 ஆயிரத்து 236 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement