வைரஸ் அப்டேட்..! தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..?

310

தமிழகத்தில் வைரஸ் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி, சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 871 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 14 ஆயிரத்து 520 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் 993 பேரும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 12 ஆயிரத்து 059 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 119 பேர் பலியான நிலையில், 5 ஆயிரத்து 633 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement