சென்னையில் மீண்டும் ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..!

281

தமிழகத்தில் வைரஸ் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி, சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் 1,187 பேரும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 14 ஆயிரத்து 260 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 117 பேர் பலியான நிலையில், 5 ஆயிரத்து 556 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement