Exclusive Report | துறைமுகத்தில் பெரும் தீ விபத்து ! 15 பேர் காயம்

216

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை பழுது பார்க்க பயன்படும் TUG என்ற உபகரணத்தினல் திடீரென இந்த தீ விபத்து ஏற்பட்டது ‌. தீ விபத்தின் போது அதில் பணி செய்து கொண்டிருந்த 15 பேருக்கும் தீவிர காயங்கள் ஏற்பட்டது.

harbour

இவர்களில் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்தைத் தொடர்ந்து அதில் இருந்த ஊழியர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தனர். தீ விபத்து குறித்து அறிந்ததை தொடர்ந்து இந்திய கப்பற்படை கப்பல் உதவியுடன் தீயணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Harbour-fire

விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு கப்பற்படை கல்யாணி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிய படகுகள் வாயிலாகவும் தீயை அணைக்க ஊழியர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். இந்த உபகரணத்தை விசாகப்பட்டினம் துறைமுகம் வாடகைக்கு அமர்த்தி பணி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of