”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்

703

துரோகத்தின் உச்சமாக செயல்பட்ட நடிகர் விஷால், கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் என்று  இயக்குநர் சேரன்  கடுமையாக விமர்சித்துள்ளார்.

 நலிந்த தயாரிப்பாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்றது.

இதில் இயக்குநர்கள் பாரதிராஜா, சேரன், நடிகர் பிரசாந்த் உள்ளபட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சேரன், நடிகர் சங்கத்திற்கு பாக்யராஜ் தலைவராகவும், தயாரிப்பாளர் சங்கத்திற்கு பாரதிராஜா தலைவராகவும் வர வேண்டும் என்றார்.

துரோகத்தின் உச்சமாக செயல்பட்ட நடிகர் விஷால், கிரிமினல் அரசியல்வாதியாக வர வேண்டியவர் என்று விமர்சித்தார்.