அமைச்சர் பியூஸ் கோயல் நாளை ராமநாதபுரம் வருகை!

229

மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயல், நாளை ராமநாதபுரம் வர உள்ளார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.காலை 9:30 மணியளவில் ராமநாதபுரம் வரும் அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதைத்தொடர்ந்து, பாஜக செயல்வீரர்கள் கூட்டத்திலும் அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்கவுள்ளார்.

இக்கூட்டத்துக்கு பின்னர் அவர், ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்த பெற்ற ராமநாதசுவாமி கோயிலுக்கு செல்ல உள்ளார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்களவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவுக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் களமிறங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of