சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு.., விமான நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

676

சர்வேதேச மகளிர் தினம் நாளை (மார்ச் 8) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதையடுத்து, 2019ம் ஆண்டு மகளிர் தினத்திலிருந்து இனி தங்களது விமானத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க உள்ளதாக விஸ்தரா ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்தச் சானிட்டரி நாப்கின் எளிதில் மக்கும் தன்மையுடன் கூடிய இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்து விஸ்தரா நிறுவனத்தின் மூத்த அதிகாரி தீபா சந்தா கூறுகையில்,

நாம் செய்யும் சிறிய செயல்கள் பின்வரும் நாட்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்படியான நல்ல மாற்றத்துக்காக எடுக்கப்பட்டுள்ள முடிவாக இதைக் கருதுகிறேன்.

மேலும், ஒரு பெண்ணாக இந்த முடிவை எடுத்துள்ள நிறுவனத்தில் பணிபுரிவதில் பெருமை கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கோடைகாலம் முதல் இந்திய விமான நிலைய கழிவறைகளில் சானிட்டரி நாப்கின் இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விஸ்தாரா நிறுவனம் விமானத்துக்குள் பயணிக்கும் பெண்களுக்கு இந்த சேவையை அளிக்க முன்வந்துள்ளது.

இதனால் சானிட்டரி நாப்கின் வழங்கும் இந்தியாவின் முதல் விமானம் என்ற பெருமையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.