ஊரடங்கு உத்தரவு..! தனியாக இருந்த பார்வை குறைபாடுள்ள பெண்..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..!

832

ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டில் தனியாக இருந்த பார்வை குறைபாடுள்ள பெண்ணை, மர்ம நபர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஷாகாபுரா என்ற பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடுள்ள பெண், வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு வயது 55. கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானுக்கு சென்ற அந்த பெண்ணின் குடும்பத்தினர், ஊரடங்கு உத்தரவின் காரணமாக அங்கேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், அந்த பெண் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement