”விஸ்வாசம்” விமர்சனம்…. அஜித் ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்..

1126

அஜித் ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்..

”விஸ்வாசம்” விமர்சனம்….

அஜித் – சிவா கூட்டணியில் நான்காவது படம், வீரம் படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க கிராமத்து கதாபாத்திரத்தில் தல அஜித் என பல காரணங்களுக்காக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ”விஸ்வாசம்” படம் இன்று திரைக்கு வந்துள்ளது.

டாக்டராக இருக்கும் நயன்தாரா கொடுவிலார்பட்டி என்கிற கிராமத்திற்கு மெடிக்கல் கேம்ப் நடத்த வருகிறார். அஜித் எப்போதும் தன் கிராமத்து மக்களுக்காக வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு செல்பவர்.

நயன்தாரா செல்லும் வழியிலேயே தூக்குதுரை (அஜித்) சிலரை போட்டு அடித்துக்கொண்டிருப்பதை பார்த்து போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால் பின்னர் அவரே வழக்கை வாபஸ் வாங்க நேரிடுகிறது. இப்படி மோதலில் ஆரம்பித்து பின்னர் அது காதலில் முடிகிறது.

கிராமத்தில் சொந்த பந்தங்களுடன் வசித்து வருகிறார் அஜித். ஊர் மக்கள் அஜித் மீது தனி மரியாதை வைத்திருக்கிறார்கள். அஜித்-நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறு வயதாக இருக்கும் போதே அஜித் – நயன்தாரா இருவரும் பிரிந்து விடுகின்றனர். நயன்தாரா தனது மகள் அனிகாவை கூட்டிக் கொண்டு மும்பை சென்றுவிடுகிறார்.

குழந்தையுடன் மும்பை சென்ற நயன்தாராவை பார்க்க பலவருடங்கள் கழித்து செல்கிறார் அஜித். மீண்டும் தன் குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்தாரா என்பதை மிக எமோஷ்னலாக கூறியுள்ளது மீதி விஸ்வாசம்.

10 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கோவில் திருவிழாவுக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடுவது வழக்கம். அந்த வகையில் தனித்து வாழும் தனது மருமகன் மனைவி, மகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆசைப்படும் மாமா தம்பி ராமையா, நயன்தாரா, அனிகாவை திரும்ப அழைத்து வரும்படி கூறுகிறார்.

இதையடுத்து இருவரையும் அழைத்துவர மும்பை செல்கிறார் அஜித். அங்கு தனது மகள் அனிகாவுக்கு, ஜெகபதி பாபுவால் ஆபத்து இருப்பதை அறிந்து கொள்கிறார்.

அங்கு தான் அப்பா என்பதை சொல்லாமல், அனிகாவுக்கு வரும் ஆபத்துக்களை அஜித் எப்படி தடுக்கிறார்? தனது மகளை எப்படி காப்பாற்றுகிறார்? ஜெகபதி பாபு யார்? அவர் ஏன் அனிகாவை கொல்ல நினைக்கிறார்? அஜித் – நயன்தாரா மீண்டும் இணைந்தார்களா?

மாஸ், கிளாஸ், என அஜித் இந்த படத்தில் இருவேறு கெட்அப்புகளில் வந்து கலக்கியிருக்கிறார். மதுரை பேச்சு, மிரட்டல் வசனங்கள், காமெடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அனைத்திலும் கலக்கியிருக்கிறார். நயன்தாராவுடன் காதல், திருமணம், மகள் மீதான பாசம் என அன்பை பொழிந்திருக்கிறார். அஜித் தனது மாஸ் தோற்றத்துடன் பெரும்பாலான இடங்களில் வேட்டி, சட்டையுடனேயே வந்து செல்கிறார்.

நயன்தாரா அஜித்துடன் காதல், சண்டை, குழந்தை மீதான பாசம் என குடும்ப பெண்ணாக வந்து ரசிக்க வைக்கிறார். ஜெகபதி பாபு வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். தம்பி ராமையா அவரது ஸ்டைலில் கலகலக்க வைக்கிறார். ரோபோ சங்கர், யோகி பாபுவும் குறிப்பிட்ட இடங்களில் காமெடியால் சிரிக்க வைக்கின்றனர். கோவை சரளா, ரமேஷ் திலக், ரவி அவானா, பாரத் ரெட்டி என மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.

தனது வழக்கமான மசாலா இல்லாமல், கிராமம், மக்கள், குடும்பம், மனைவி, மகள் என படத்தின் கதை நகர்கிறது. படத்தில் அஜித்துக்கு மாஸான பேச்சு, சண்டைக்காட்சிகள் இருந்தாலும், அஜித்தை இன்னும் மாஸாக காட்டியிருக்கலாமோ என்று யோசிக்க வைத்துவிட்டார்.

டி.இமான் இசையில் பாடல்கள் பட்டையை கிளப்புகின்றன. பின்னணி இசையில் மிரள வைத்திருக்கிறார். வெற்றியின் ஒளிப்பதிவில் கிராமம்,  நகரம் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்தத்தில்: விஸ்வாசம் படத்தால் சிவா இஸ் பேக். தல ரசிகர்களுக்கு தரமான பொங்கல் ட்ரீட்.

#Viswasam #ViswasamReview #ViswasamFromToday  #ViswasamFDFS #ViswasamThiruvizha #BlockbusterViswasam #AjithKumar #Nayanthara

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of