தல ரசிகர்களுக்கு வந்த இன்ப அதிர்ச்சி..,

1068

பொங்கல் பண்டிகை சிறப்பாக்கவும், தல ரசிகர்களை உச்சி குளிரவைக்க விஸ்வாசம் திரையிடப்பட்டது. இப்படத்தில் அப்பா, மகள் செண்டிமெண்ட் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரையும் கொண்டாட செய்தது.

100 நாட்களை கடந்து ஓடிய இந்த படம் ‘தல’ அஜித்தின் படங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது . இயக்குனர் சிவாவும் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார். படத்தை போலவே தல ரசிகர்களை மட்டுமின்ற அனைவரையும் சுண்டி இழுத்தனர்.

அதிலும் ‘கண்ணான கண்ணே’ பாடல் அனைவருக்கும் பிடித்த ஒன்றாகிவிட்டது. பலரும் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ், ரிங்டோன் மற்றும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வகையில் இமானின் இசை அமைந்துள்ளது.

ரசிகர்களை எந்த அளவிற்கு ஈர்த்துள்ளது என்பதை youtube-ன் பார்வையாளர்களை கொண்டு நமக்கே புரியும். இப்போது இந்த பாடல் youtube-ல் 50 மில்லியன் பார்வைகளை தாண்டி செல்கிறது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement