அஜித்-விஜய் ரசிகர்களின் “டுவிட்டர் டிஷ்யூம்”.. டிரெண்டாகும் விஸ்வாசம்.. என்னதான் பிரச்சனை?

211

சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் அதிகம் பயன்படுத்துவது டுவிட்டர். இதில் தான் டிரெண்டிங் என்பதை வைத்து கொண்டு ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இந்த டிரெண்டிங் விஷயத்தில் அடிக்கடி மோதல்கள் நடக்கும்.

இந்த ஆண்டு அஜித் நடித்து வெளிவந்த விஸ்வாசம், அடுத்து நடிக்கப் போகும் வலிமை, விஜய் நடித்து வெளிவந்த பிகில், அடுத்து நடித்து வரும் விஜய் 64 ஆகிய படங்களைப் பற்றி டுவிட்டரில் இந்த ஆண்டில் இதுவரை பல டிரெண்டிங், பல மோதல்கள் நடந்து வந்துள்ளன.

2019ம் ஆண்டைப் பொறுத்தவரையில் விஸ்வாசம் #Viswasam என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் மிகவும் செல்வாக்குமிக்க தருணம் ஆக இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்த ஹேஷ்டேக்கைத்தான் பலரும் பயன்படுத்தி டுவீட் செய்துள்ளனர்.

இதற்கடுத்து, #LokSabhaElections2019, #CWC19, #Maharshi, #HappyDiwali ஆகியவை இடம் பிடித்துள்ளன.இந்த சாதனையைப் பற்றி விஸ்வாசம் படக்குழுவினர், அஜித் ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் பரவலாகப் பதிவிட்டிருந்தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் ரசிகர்கள் விசவாசம் என்ற அர்த்தத்தில் visawasam என்ற ஹேஷ்டைக்கை டிரெண்டிங்கில் கொண்டு வந்து இதிலும் சண்டையிட்டுக் கொண்டனர்.