தல படத்தை வெளியிடும் பிரபல நிறுவனம்…

465

பிரபல நிறுவனம் ஒன்று அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வாசம்’ பட விநியோக உரிமையை கைப்பற்றியுள்ளது.

‘விஸ்வாசம்’ பட டிரைலரை சுமார் 17 கோடியே 80 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவான இந்த படத்துக்கு சுமார் 12 லட்சம் லைக்ஸ் கிடைத்திருக்கிறது.

மேலும், தஞ்சாவூர், திருச்சி பகுதிகளுக்கான பட விநியோக உரிமையை பிரபல சக்தி பிலிம் பேக்டரி கைப்பற்றியுள்ளது.

மதுரை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் தல அஜித் `தூக்கு துரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.

மேலும், இந்த படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்துக்கு போட்டியாக சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீசாவதால் இரு படங்களுக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of