மீண்டும் மிரட்ட வரும் விவேக்..! தயாராகிறது அந்த சூப்பர் ஹிட் படத்தின் 2-ஆம் பாகம்..!

334

காமெடி வேடங்களில் நடித்து மக்களை மகிழ்வித்து வந்த நடிகர் விவேக், தற்போது குறைவான அளவிற்கே படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில், விஸ்வாசம்; படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலே மட்டுமே நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் நடிக்க இருக்கும் மாஸான படத்தின் 2-ஆம் பாகம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெள்ளைப்பூக்கள் என்ற திரைப்படம் வெளியானது.

ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக விவேக் நடித்திருந்த இந்த திரைப்படத்தை, விவேக் இளங்கோவன் என்பவர் இயக்கி இருந்தார். குற்றவாளிகளை எளிதில் கண்டறியும் போலீஸ் அதிகாரி, ஓய்வு பெற்ற பிறகு அமெரிக்காவில் தனது மகனுடன் வசிக்கிறார்.

அப்போது, மகன் வீட்டுக்கு அருகில் பல்வேறு மர்ம கொலைகள் அரங்கேருகின்றன. இந்த கொலைகளை விவேக் எப்படி கண்டுபிடித்தார். யார் இதற்கெல்லாம் காரணம். எதற்காக இந்த கொலைகள் நடத்தப்பட்டது என்பதை விறுவிறுவென காண்பித்த திரைப்படம் வெள்ளைப்பூக்கள்.

திரைப்படம் வெளியாகி சினிமா விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of