வெற்றி எப்பவுமே ஒரு போதை தரும்… அது விஜய்க்கு ஏறுனதே இல்லை – விவேக்

359

விஜய்-அட்லீ 3-வது முறையாக இணைந்துள்ள படம் பிகில். இப்படத்திற்கு ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இப்படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தில் விஜய், நயன்தாரா, , இந்துஜா, கதிர், ஆனந்த்ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:- இந்த இடத்திற்கு வர எனக்கு 3 மணி நேரம் ஆச்சு. அத்திவரதருக்கு பிறகு அதிக மக்கள் கூடிய இடமாக இந்த இடத்தை பார்க்கிறேன். பிகில் படத்தில் வரும் கால்பந்து போட்டி ஒலிம்பிக் போட்டியை போன்று சிறப்பாக இருக்கும்.

அட்லி உழைப்பு எனக்கு பிடிக்கும். சூரியனை மாதிரி பிரகாசமா சுடர்விட்டு இருக்கணும்னா, சூரியனை மாதிரி இடைவிடாம எரியனும் ,உழைக்கணும். அதனால தான் அட்லீ கருப்பா இருக்கார் போல. வெற்றி எப்பவுமே ஒரு போதை தரும் ஆனால் அது விஜய்க்கு ஏறுனதே இல்லை.  இவ்வாறு அவர் பேசினார்.