தேர்தலுக்கு முன்நாளே விரலில் மை வைத்தனர்! பாஜகவினர் மீது குற்றம்சாட்டிய வாக்காளர்கள்!

761

17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் அந்தந்த தொகுதி பொதுமக்கள் காலை முதலே அவர்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தின் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. பாஜகவை சேர்ந்த 3பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்தலுக்கும் ஒரு நாளைக்கு முன்னதாகவே வாக்காளர்கள் விரலில் மை வைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினரும், தேர்தல் அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

2
Leave a Reply

avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
2 Comment authors
Lakshmi kumarselvin.P Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
selvin.P
Guest
selvin.P

vaalga jananaayagam.

Lakshmi kumar
Guest
Lakshmi kumar

500 ரூ வாங்கியபின் ஏதாவது ஒரு அடையாள ரசீது தர வேண்டாமா. ஓட்டுப்போடா மல் யாரீம் தடுத்தான் தப்பு