லாரியில் வாக்கு எந்திரங்கள் – பொதுமக்கள் சிறைபிடிப்பால் பரபரப்பு

980

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் லாரியில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு எந்திர பெட்டிகள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

voting machine boxes caught by people

ஜார்கண்டின் டியோகர் பகுதியில் லாரியில் வாக்குப் பதிவு எந்திரங்கள் கொண்டுசெல்லப்படுவதாக தகவல் பரவிய நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஆர்.ஜே.டி மற்றும் ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சந்தேகத்திற்கு இடமான லாரி ஒன்றை தடுத்து நிறுத்தினர்.

அதனை திறந்து பார்த்த போது உள்ளே வாக்கு எண்ணிக்கை எந்திரங்கள் வைக்கும் பெட்டிகள் இருந்துள்ளன.

இதனால் பொதுமக்கள் அந்த லாரியை முற்றுகையிட்ட நிலையில் அங்கு வந்த அப்பகுதி தேர்தல் அதிகாரி, அவை வெறும் காலி பெட்டிகள் தான், ஏற்கனவே வாக்குப்பதிவு எந்திரங்களை வாக்கு எண்ணும் இடத்திற்கு அனுப்பியாகிவிட்டது.

வேண்டுமென்றால் நேரில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள் என கூறி மக்களை அப்புறப்படுத்தினார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of