கல்யாண வீடு சீரியலில் பாலியல் வன்முறை காட்சி..! அதிரடி நடவடிக்கை எடுத்த பிசிசிசி..!

12018

மெட்டி ஒலி என்ற சீரியலின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் திருமுருகன். இவர் தற்போது கல்யாண வீடு என்ற சீரியலை இயக்கி வருகிறார். பாலியல் வன்முறை மற்றும் அதற்கு தண்டனை தரும்படியாகவும் காட்சிகள் கல்யாண வீடு சீரியலில் இடம் பெற்றிருந்தது.

இதனைப்பார்த்த பார்வையாளர்கள் பிசிசிசி என்ற தளத்தில் புகார் செய்திருந்தனர். இதனையடுத்து, விளக்கம் அளிக்கும்படி பிசிசிசி அந்த சீரியல் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிக்கும், திரு பிக்சர்ஸ்க்கும் நோட்டீஸ் அனுப்பியது.

அவர்கள் இதுதொடர்பாக கடந்த மாதம் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த பிசிசிசி, அந்த தொலைக்காட்சிக்கு 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மேலும், சீரியல் ஒளிபரப்புவதற்கு முன்னாள் பாலியல் வன்முறை தொடர்பான காட்சிகளை ஒளிபரப்பியதால் தாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம் என்று 30 விநாடிகளுக்கு ஒளிபரப்ப வேண்டும் என்றும் அந்த தொலைக்காட்சிக்கு பிசிசிசி உத்தரவிட்டது.