விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல், கிறிஸ்டியன் மைக்கேலுக்கு 5 நாள் காவல்

254

வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் வி.வி.ஐ.பி.க்களுக்கான ஹெலிகாப்டர் வாங்க இத்தாலியை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட, கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா கொண்டு வரப்பட்டு நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். இதையடுத்து மைக்கேல் நேற்று மாலை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது மைக்கேலை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.

ஆனால் மைக்கேலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனிடையே மைக்கேல் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.