கர்நாடகாவில் உள்ள கல்குவாரியில் கூலி தொழிலாளர்களை அடைத்து சித்தரவதை

703
karnataka

கர்நாடகாவில் உள்ள கல்குவாரிகளில் தமிழக கூலி தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக அடைத்து சித்தரவதை செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள், செங்கல் சூளைகளில் விருப்பமின்றி தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருவதாகவும், பலரை கொத்தடிமைகளாக அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஜானகி என்ற பெண் தனது கணவர் சின்னதம்பியுடன் கடந்த 4 ஆண்டுகளாக கல்குவாரியில் கொத்தடிமைகளாக பணிப்புரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

உடலநலக்குறைவு காரணமாக சின்னதம்பி அண்மையில் உயிரிழந்தார். இதனால் வாங்கிய கடனை செலுத்த முடியாமல், ஜானகி தலைமறைவாகி, பெலகொலா கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

இதனை அறிந்து வந்த கல்குவாரி உரிமையாளர் நாகேஷ், ஜானகியை சரமாரியாக தாக்கி தரதரவென இழுத்து சென்று காரில் ஏற்றி சென்றார். இது தொடர்பான வீடியோ வைரலானதை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கடத்திய நாகேசை கைது செய்தனர்.

இதே போன்று தமிழகத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் பலர் கொத்தடிமைகளாக இருப்பதாகவும், அவர்களை மீட்க தமிழக அரசு, மாண்டியா மாவட்ட நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினால் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.