நீரில் அடித்து செல்லப்பட்டு மாயமான சுற்றுலா பயணி

215

ஆந்திராவில் அணையில் இறங்கிய சுற்றுலா பயணி நீரில் அடித்து செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்

கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணா நதியில் உள்ள அணைகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக நிரம்பி வருகின்றன.

இதையடுத்து, ஸ்ரீசைலம் மற்றும் நாகர்ஜுன் சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நாகார்ஜுன் சாகர் அணையில் குளிப்பதற்காக இறங்கிய சுற்றுலா பயணி நீரில் அடித்து செல்லப்பட்டதால் சக சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நீரில் அடித்து செல்லப்பட்ட நபரை தேசிய பேரிடர் படையினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.