சீன எல்லைப் பகுதியில் போர் விமானங்கள் கண்காணிப்பு

435

ஜம்மு – காஷ்மீரின் லடாக் பகுதியில் கடந்த கடந்த ஜூன்மாதம் 15- ஆம்தேதி இந்திய – சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத்தொடர்ந்து எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.

இருதரப்பும் எல்லைப்பகுதியில் படைகளை குவித்த நிலையில், நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து சீனப்படைகள் கிழக்கு லடாக் எல்லைப்பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் பின்வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்றிரவு இந்திய விமானப்படையினர் எல்லைப்பகுதியில் கண்காணிப்புப்பணியை தீவிரப்படுத்தினர். அதிநவீன அப்பாச்சிரக ஹெலிகாப்டர்கள், மிக் – 29 ரக விமானங்கள் ஆகியவை ரோந்துப்பணியில் ஈடுபட்டன.

லடாக் அருகே அமைக்கப்பட்ட விமானப்படை தளங்களில் இருந்து போர்விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து கண்காணி்ப்புப்பணியில் ஈடுபட்டன. முன்களப்பகுதியில் விமானப்படை தளபதிகள் போர்விமானங்களில் பறந்து கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of