பிரசவத்திற்கு வந்த இளம்பெண்..! Ward பாய் பண்ண Bad வேலை..! அதிர்ந்த மருத்துவமனை..!

1636

எங்கு சென்றாலும் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறியவர் முதல் வயதானவர்கள் வரையுள்ள அணைத்து பெண்களுக்கும் நாட்டில் பாதுகாப்பு குறைந்துக்கொண்டே செல்கிறது. ஊனமுற்றோரை கூட விட்டு வைக்காத இந்த கொடூரர்களின் செயல் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது.

அந்த வகையில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிரசவத்துக்காக பஞ்சரா ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அந்தப் பெண்ணின் உடல் நிலை குழந்தை பிறந்த பிறகு மோசமானதையடுத்து, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று, 50 வயதுடைய அச்யுத் ராவ் என்பவர் வென்டிலேட்டரில் இருந்த அந்த பெண்ணிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளார். அப்போது, அவரால் கூச்சல் கூட போட முடியாத நிலையில் இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை.

நேற்று அந்த பெண்ணுக்கு உடல் நிலை சரியான நிலையில், தனது கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கணவர், பஞ்சரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், 50 வயது மதிக்கத்தக்க அந்த வார்ட் பாயை கைது செய்தனர்.

Advertisement