வாரிசுகளுக்கு எச்சரிக்கை… சொத்து போய்டும்.. கவனமா இருங்க..

741

பெற்றோர்களை ஏமாற்றி, சொத்தை அபகரித்து,  வீட்டை விட்டு விரட்டி அடிக்கும் வாரிசுகளுக்கு அதிரடி எச்சரிக்கை செய்தியொன்று அரசு நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட் நகரம் கெங்கையம்மன் கோவில் தெருவைத் சேர்ந்தவர்கள் ராஜகண்ணு, வசந்தா தம்பதியினர். இவர்களின் மகன் பிரபு, பெற்றோர்களின் சொத்தை எழுதி வாங்கிக் கொண்டு, இருவரையும் பராமரிக்காமல், கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சிய சண்முகசுந்தரத்தின் உத்தரவின் பேரில், துணை ஆட்சியர் ஷேக் மன்சூர் அதிரடி நடவடிக்கை எடுத்தார். முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் 2007-ன் கீழ், பெற்றோரை ஏமாற்றிய மகன் பிரபு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மகன் மீது ராஜகண்ணு, வசந்தா தம்பதியர் எழுதி வைத்த சொத்துக்களின் பத்திரப்பதிவை ரத்து செய்த துணை ஆட்சியர், மீண்டும் அந்தச் சொத்துகளை, பாதிக்கப்பட்ட பெற்றோருக்கே மீண்டும் வழங்கினார்.

இந்தச்சம்பவம், பெற்றோர்களை ஏமாற்றி, சொத்தை அபகரித்து, அவர்களை பராமரிக்காமல் வஞ்சகம் செய்யும் வாரிசுகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமைந்துள்ளதாக, குடும்ப நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement