துப்பாக்கியை தவறுதலாக இயக்கியதில் நண்பன் சாவு – போலீசுக்கு பயந்து சிறுவன் தற்கொலை

499

துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதில் குண்டு பாய்ந்து நண்பன் பலி – போலீசுக்கு பயந்து சிறுவன் தற்கொலை.

வாஷிங்டன் : லாரன்சஸ்வில்லேவை சேர்ந்த சிறுவன் டெவின் ஹோட்ஜ் (வயது 15). நேற்று முன்தினம் டெவினை பார்க்க 3 நண்பர்கள்  வந்தனர். அப்போது சிறுவன், தங்கள் வீட்டில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து நண்பர்களிடம் காட்டிக்கொண்டிருந்தபோது தவறுதலாக துப்பாக்கியை அழுத்திவிட்டான் டெவின்.

இதில் அருகில் இருந்த அவனது நண்பன் சாத் கார்லெஸின் உடலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற 2 நண்பர்களும், ஓடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீஸ் வருவதற்குள் சாத் கார்லெஸ் பரிதாபமாக உயிரிழந்தான்.

போலீஸ் வருவதை கண்டு டெவின் தன்னை எப்படியும் போலீசார் பிடித்துவிடுவார்கள் என பயந்து தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of