10 கி.மீ. ஜாகிங் சென்ற மம்தா..! அசத்தலான காரணம்..!

371

சர்வதேச பருவநிலை மாறுபாடு விழிப்புணர்வு தினமான நேற்று, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு மலைப்பாதையில் ஜாக்கிங் சென்றார்.

டார்ஜிலிங்கில் உள்ள மலையடிவார பகுதியான குர்சியானில் இருந்து மகாநதி வரை ஜாகிங் சென்ற அவர், வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதே வழியில் மீண்டும் திரும்பினார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள மம்தா பேனர்ஜி, சர்வதேச பருவநிலை மாறுபாடு விழிப்புணர்வு தினத்தில் பூமி மற்றும் சுற்றுசூழலை பாதுகாக்க அனைவரும் உறுதி எடுத்துக்கொள்ள கேட்டுக்கொண்டார்.

64 வயதாகும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தனது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வீட்டில் வுசநயனஅடைடலில் தினமும் நடைபயிற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement