யூடியூப் பார்த்து கற்றுகொண்டேன்..! கையும் களவுமாய் சிக்கிய இன்ஜீனியர்

1169

சென்னை அடுத்த ஆவடி அருகே உள்ள முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற இன்ஜினீயர் உதயசூரியன் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் நான் கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்தேன் அங்கு எனக்கு மதாம் 40000 ரூபாய் சம்பளம் கிடைத்து.

தற்போது அந்த கம்பெனி முடியதால் எனக்கு வேலை இல்லாமல் சிறிது காலம் இருந்தேன்அதன் பிறகு அருகில் உள்ள மருந்தகத்தில் வேலை கிடைத்து அங்கு 20000 ரூபாய் சம்பளம் கிடைத்தது.

நல்ல வேலை கிடைக்கும் வரை இந்த வேலை தான் பார்த்து வந்தேன். ஆனால் சேமித்த 18 லட்சம் பணத்தை இரட்டிப்பாக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்தேன்.

ஆனால் பொருளாதார மந்தநிலை காரணமாக நான் முதலீடு செய்த பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் லட்சக்கணக்கில் எனக்கு நஷ்டம் ஏற்ப்பட்டது மேலும் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தேன். அதன் பிறகு தான் எப்படி பணம் சம்பாதிப்பது என்று இணையத்தில் தேடினேன்.

மேலும் ஹாலிவுட் படங்களை அதிகம் பார்பேன். மேலும் ஏடிஎம் மையங்களில் கேமராக்களில் சிக்காமல் கொள்ளையடிப்பது எப்படி என்று யுடியூப் இணையத்தில் சில வீடியோ பார்ப்பேன்.

அதில் மாட்டாமல் கொள்ளையடிப்பது எப்படி என்று கற்றுகொண்டு அதற்கு தேவையான பொருள்களை வாங்கினேன்.அதன் பிறகு ஆள்நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் ஏடிஎம் மையத்தை நோட்டம்மிட்டு செல்வேன்.

முதல் நாள் செல்லும் போது காவல் துறை அவ்வழியாக வந்தனர். அதை பார்த்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டேன்.அடுத்த நாள் வேற ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க சென்று அங்கு 4,05,000 ரூபாய் இருந்தது அதனை எடுத்து மீண்டும் பங்கு சந்தையில் செலுத்தினேன்.

அதுவும் நட்டத்தில் போனது. அதன் பின் 5-ம் தேதி அதிகாலை 1 மணியளவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தேன்.ஒரு லாக்கரை உடைத்து அடுத்த லாக்கரை உடைப்பதற்குள் போலீசிடம் சிக்கி கொண்டேன். என்று கூறியதாக போலீசார் கூறுகிறார்கள்.

இவர் காதல் திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இவர் திருடுவது இவர் குடும்பத்துக்கு தெரியாது.

Advertisement