குடிநீர் வாரிய நீர் நிலையங்களிலிருந்து தேவையான நீரை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் – எஸ்.பி.வேலுமணி

1107

நுகர்வோர்கள் சென்னை குடிநீர் வாரிய நீர் நிலையங்களிலிருந்து ஒரு வாரத்திற்கு தேவையான நீரை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தத்தால் சென்னை மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க சென்னை குடிநீர் வாரியத்திடம் விண்ணப்பித்து, ஒரு வாரத்துக்கு தேவையான குடிநீரை பெற்றுக் கொள்ளலாம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கட்டணத்தை முன்னரே செலுத்தி, சென்னை குடிநீர் வாரிய நீர் நிலையங்களிலிருந்து தண்ணீரை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

நுகர்வோர்கள் தங்களது லாரிகள் அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட லாரிகள் மூலம் குடிநீரை பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.

இரவு10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குடிநீர் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of