சென்னைக்கு கொண்டு வரப்படும் தண்ணீர் – அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்!

533

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை, சென்னைக்கு ரயில் மூலம் விரைவில் கொண்டு செல்லப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இத்திட்டத்திற்கான பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து விட்டதாகவும், இன்னும் 3 நாட்களில் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், வருகின்ற10ஆம் தேதி ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

குழாய் புதைக்கும் பணிக்காக மேட்டூர் அணையில் இருந்து வரக்கூடிய தண்ணீரை, தற்போது முழுமையாக நிறுத்தி வைத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of