பீச்சிக்கிட்டு அடிச்ச தண்ணீர் – தலைதெறிக்க ஓடிவந்த மக்கள் – ஏன் தெரியுமா..?

955

நெல்லையில் விவசாயி ஒருவர் வீட்டில் குடிநீருக்காக போர் போட்ட போது, நிலத்தில் இருந்து தண்ணீர் பீறிட்டு அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சிறுக்கன்குறுச்சியை சேர்ந்தவர் விவசாயி பொன்னையா. இவர் தனது வீட்டில் குடிநீருக்காக போர் போட்டுள்ளார்.அப்போது வீட்டை ஒட்டி சென்ற தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்டத்தின் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து பல அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு அடித்தது.

கூட்டுநீர் குழாயில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேறியதால் ஏராளமான குடிநீர் வீணானது. இதையடுத்து பொதுமக்கள் தண்ணீர் வீணாவதை தடுக்கும் வகையில் மணலை கொட்டி, தண்ணீர் வெளியேறுவதை தடுத்தனர். இதனால் அந்த பகுதி பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of