கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

197

தொடர் கனமழை எதிரொலியாக, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 8 ஆயிரத்து 300 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து கடந்த 17ஆம் தேதி முதல் காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரத்து 200 கன அடி திறக்கப்பட்டு வந்த நிலையில், 4 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கபினி அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கன அடியில் இருந்து 3 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது. இரு அணைகளிலும் சேர்த்து விநாடிக்கு 8 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது.

கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of