தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

542

தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தங்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிக நோக்கில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை தடை செய்வதுடன், சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்ககோரி சென்னை உள்ளிட்ட 3 மாவட்ட தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கேன் குடிநீர் உற்பத்தியாளர்களும் நேற்று முன்தினம் முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தண்ணீர் தட்டுப்பட்டால் சென்னையில் வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டன. இதைதொடர்ந்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பொதுப்பணித்துறை செயலாளர் பிரபாகர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதில் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

Advertisement