கேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

283

கிருஷ்ணகிரி கேஆர்பி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் ஆர்வத்துடன் உழவுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள கேஆர்பி அணையின் மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. ஆண்டுதோறும் விவசாயிகளின் முதல் போக பாசனத்திற்காக ஜூலை மாதங்களில் இந்த அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

அந்த வகையில் இந்தாண்டு ஜூலை 5ஆம் தேதி முதல் அணையின் வலது மற்றும் இடது கால்வாய்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 120 நாட்களுக்கு சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனத்திற்காக தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் களை எடுத்தல், ஏர் உழுதல், நாற்று நடுதல் உள்ளிட்ட உழவு பணிகளை ஆர்வமாக மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of