ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறப்பு

355
Aliyar-Reservoir

கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது.

ஆழியாறு பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருநதனர். இதனை ஏற்று ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டம், ஆழியாறு படுகையின் பொள்ளாச்சி கால்வாய் ‘அ’ மண்டலம், வேட்டைக்காரன்புதூர் கால்வாய் ‘ஆ’ மண்டலம், சேத்துமடைக் கால்வாய் ‘அ’ மண்டலம், ஆழியாறு ஊட்டுக் கால்வாய் ‘அ’ மண்டலம் ஆகிய பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் பொள்ளாச்சி வட்டத்தில் உள்ள 22ஆயிரத்து 116 ஏக்கர் நிலம் பாசனம் பெற உள்ளது.