மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிறுத்தம்..!

251

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜுன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

கடந்தாண்டு 2 மாதம் தாமதமாக ஆகஸ்ட்13 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. டெல்டாவில் அறுவடை பணிகள் முடிவதால், இன்று மாலையுடன் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.

நடப்பு நீர் பாசன ஆண்டில் மேட்டூர் அணைக்கு 259 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது. டெல்டா பாசனத்திற்கு 151 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில், மேட்டூர் அணை 4 முறை நிரம்பியதால் உபரிநீராக 27.7 டிஎம்சி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டுள்ளது.

நடப்பாண்டில், மேட்டூர் அணை 79 நாட்கள் 120 அடியாக இருந்துள்ளது. கடந்த ஆகஸ்ட்13 தேதி முதல் இன்று வரை, 169 நாட்கள் 100 அடிக்கு மேலே நீர்மட்டம் தொடர்ந்து நீடித்துள்ளது.

1947ம் ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட போது, அணையின் நீர்மட்டம், 114.50 அடியாக இருந்துள்ளது. அணையின் வரலாற்றில் நீர்திறப்பு நிறுத்தப்பட்ட போது, நீர் மட்டம் மிக அதிகபட்சம் இருந்தது அந்த ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of