தானாக பொங்கி வரும் தண்ணீர்… ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்

669

பேராவூரணி அருகே கரிசவயல் ஊராட்சிக்குட்பட்ட பூங்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான மணிவண்ணன் என்பவரது தென்னந்தோப்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.தற்போது வரை இந்த ஆழ்துளை கிணறு பயன்பாட்டில் உள்ள நிலையில் இதிலிருந்து திடீரென செயற்கை ஊற்றுபோல சுமார் 10 அடி உயரத்திற்கு நீர் பொங்கி வரத்தொடங்கியது.

ஆழ்துளை கிணற்றிலிருந்து நீர் தானாக பீய்ச்சியடிப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதனை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, நீர் பொங்கி வந்து கொண்டிருக்கிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.