“பயமா ? எங்களுக்கா ?”, எல்லாம் எங்கள் கையில் தான் உள்ளது

493

உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ‘லீக்’ ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி 7 ஆட்டத்தில் 4 வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. இனி வரும் ஆட்டங்களில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நான் நினைக்கிறேன்.

அவர்கள் நல்ல பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி விளையாடினார்கள். எங்களுக்கு விரைவில் விக்கெட்டுக்கள் விழுந்ததால் நெருக்கடி ஏற்பட்டது என்றார்.

மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தோல்வியால் இங்கிலாந்து அணி ‘பீதி’ அடையவில்லை. எல்லாமே எங்கள் கையில் தான் இருக்கிறது. வரும் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி முன்னேற்றம் காண்போம் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

Advertisement