விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் – கே.எஸ். அழகிரி

293

சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தால் என்ன பலன் என தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இல்லையெனில் பல்வேறு அறிவிப்புகளை போல் இதுவும் ஒரு அறிவிப்பாகவே இருந்துவிடும் என தெரிவித்தார்.

ஏழு தமிழர்களை நீதிமன்றம் தான் மன்னிக்க வேண்டும் என்று கூறிய அவர், மன்னிப்பு பற்றி பேசுபவர்கள் வீட்டில் கொலை நடந்தால் ஏற்றுக்கொள்வார்களா எனவும் கேள்வி எழுப்பினார்.

நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என்று கூறிய அவர், ஆனால் கட்சியில் சேர அழைப்பு விடுக்கும் அதிகாரம் மேல் இடத்திற்கு தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.